இலங்கையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சம்! வெறிச்சோடிப்போன பாடசாலைகள்

Report Print Murali Murali in சமூகம்

மட்டக்களப்பிலுள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகை நேற்றைய தினம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம், புணானை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றிலேயே, மாணவர் வருகை வீழ்ச்சியடைந்து, குறித்த பாடசாலைகள், வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளன.

மட்டக்களப்பிலுள்ள தனியார்ப் பல்கலைக்கழகத்தில், கொரோனா வைரஸ் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ​பரவியதால், மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டதாகத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் வருகையில் மாற்றமிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.