சிறைக்குள் இருந்து பொதுத் தேர்தலுக்கு தயாராகும் பிள்ளையான்!

Report Print Vethu Vethu in சமூகம்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார்.

அவர் தலைமைத்துவம் வழங்கும் கட்சியின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவரது கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே போட்டியிடவுள்ளதாகவும், படகு சின்னத்தில் போட்டியிடவுள்ளளதாகவும் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் உள்ள அவர் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அவரது கட்சியின் செயலாளர் பூபாலசிங்கம் பிரஷாந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை இல்லை என்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.