கொரோனா வைரஸின் தீவிரம்! இலங்கையிலும் சில பகுதிகள் மூடப்படும் அபாயம்

Report Print Vethu Vethu in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் சில பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் மக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமை இலங்கையிலும் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகளினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றவில்லை என்றால் கொரோனா வைரஸ் பரவி, நாட்டிலுள்ள ஒரு பகுதி மூடப்படட வாய்ப்புகள் உள்ளது.

எனவே சுகாதார அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். தொடர்ந்துk் சுகாதார பிரிவுகளின் ஆலோசனைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பரிசோதிக்கப்பட்ட பின்னரே மட்டக்களப்பு நோக்கி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மேலும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என இயக்குனர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


you may like this video