இலங்கை பெண்ணுக்காக கடுமையாக மோதிக் கொண்ட இரு வெளிநாட்டவர்கள்!

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையிலுள்ள உனவட்டுன கடற்கரையில் கடும் மோதலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களில் ஒருவர் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் தொடர்பில் இந்த வெளிநாட்டவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் நீண்ட தூரம் சென்றுள்ளது.

பிரித்தானிய நாட்டவர் ஒருவரும், இத்தாலி நாட்டவர் ஒருவருமே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை பெண் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் பிரித்தானிய நாட்டவருடன் காதல் தொடர்பு ஏற்படுத்தி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் அந்த காதல் தொடர்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் வேறு வெளிநாட்டவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்த காதல் தொடர்பு காரணமாக பிரித்தானிய நாட்டவரினால் இத்தாலி நாட்டவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.