தென் கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வந்த 300 பேர்! விமான நிலையத்தில் பதற்றத்துடன் சிலர்

Report Print Steephen Steephen in சமூகம்

தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்ப பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் கண்காணிப்பதற்காக கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

எவ்வாறாயினும் சிலர் கண்காணிப்பு நிலையங்களுக்கு செல்ல மறுத்துள்ளதுடன் விமான நிலையத்தில் பதற்றமாக நடந்துக்கொண்டுள்ளனர்.

கண்காணிப்பு நிலையங்களில் அல்ல தமது வீடுகளில் 14 நாட்கள் இருக்க முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.