இலங்கையில் கொரோனாவைரஸ் தொற்றுக்கு இலக்கானவரின் குடும்பம் கண்காணிப்பில்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் கொரோனாவைரஸ் தொற்றுக்கு உள்ளான முதல் இலங்கையரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைரஸ் தொற்றை கொண்ட குறித்த இலங்கையர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுற்றுலா வழிகாட்டியான இவர் இத்தாலி பயணிகளுடன் பயணித்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று நம்பபப்படுகிறது.

இந்த நிலையில் கொழும்பில் உள்ள அவரின் குடும்பத்தையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.