மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையினை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிலுள்ள சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிபகிஸ்கரிப்பு மற்றும் போராட்டம் ஆகியவற்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மட்டக்களப்புக்கு வேண்டாம், கொரோனாவிற்கு கிழக்குதான் இலக்கா? மட்டக்களப்பினை சுடுகாடாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்க சிகிச்சை வழங்கும் செயற்பாடாது மட்டக்களப்பு மாவட்டத்தினை முற்றுமுழுதாக பாதிப்புக்கு உள்ளாக்கும் எனவும் இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.