ஐ.அரபு ராஜ்ஜியத்தில் இரு இலங்கையர்களுக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் இரண்டு பேர் இலங்கையர்கள் என கோல்ஃப் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இவர்களை தவிர மூன்று இத்தாலியர்கள், இரண்டு ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தினர், இரண்டு பிரித்தானியர், ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, தன்சானியா, ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் இதில் அடங்குகின்றனர்.

தற்போது இவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் 74 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.