சிலாபம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்?

Report Print Steephen Steephen in சமூகம்
1930Shares

சிலாபம் வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று மதியம் அவர் அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிலாபம் சேருகெலே பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் இத்தாலியில் தொழில் புரிந்து வந்ததுடன் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளார்.

இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றதை அடுத்து, வைத்தியசாலை அதிகாரி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்களை வகுத்துள்ளனர்.

இது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சிலாபம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் கே.பி. மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.