வவுனியாவில் 15 வயது சிறுமி மீது பாலியல் வன்புணர்வு! பாடசாலை அதிபருக்கு எதிராக முறைப்பாடு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, செட்டிகுளம், பாவற்குளம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக உடல் ரீதியான தொல்லை கொடுத்து வன்புணர்வு செய்து வந்ததாக அதிபர் ஒருவருக்கு எதிராக செட்டிகுளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், பாவற்குளம் படிவம் இரண்டு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்று இடைவிலகிய 15 வயது சிறுமி ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறியிருந்தார்.

குறித்த சிறுமியை சிறுமி கல்வி கற்ற பாடசாலையின் பிரதி அதிபரின் மனைவி பொறுப்பேற்று தமது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பிரதி அதிபர் சிறுமியை உடல் ரீதியாக பாலியல் தொல்லைகள் கொடுத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சிறுமி அயலவர்களின் உதவியுடன் கிராம அலுவலர் மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை மீட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் செட்டிகுளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த பிரதி அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

தற்போது விசாரணைக்கு அழைக்கப்பட்ட பிரதி அதிபர் பிறிதொரு பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.