இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

Report Print Steephen Steephen in சமூகம்
267Shares

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக செல்வோர் தமது பயணத்தை தற்காலிமாக ஒத்திவைக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையர்கள் அதிகளவில் வேலை வாய்ப்பு பெற்று செல்லும் மத்திய கிழக்கு உட்பட ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், இலங்கையர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவி வரும் இலங்கையர்கள் தொழில் புரிந்து வரும் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள், இலங்கை தொழிலாளர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் பணியகம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், தகவல்களை பெற்றுக்கொள்ள அந்நாடுகளில் உள்ள தூதரகங்கள் விசேட தொலைபேசி எண்களை வழங்கியுள்ளன. அத்துடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புக்கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பணியகம் அறிவித்துள்ளது.