தேவை ஏற்பட்டால் பயன்படுத்தவே 7500 ரூபாய் வைத்திருக்குமாறு கூறப்பட்டது!

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க எவ்வித கட்டணமும் அறிவிட அரசாங்கம் திட்டமிடவில்லை என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்படும் 14 நாள் காலத்தில் ஏதேனும் பண தேவை ஏற்பட்டால், பயன்படுத்துவதற்காக 7 ஆயிரத்து 500 ரூபாயை வைத்துக்கொள்ளுமாறு அறிவித்திருந்ததாகவும் இதனை பலர் தவறாக புரிந்துக்கொண்டு, தனிமைப்படுத்துவதற்காக பணம் அறவிடப்படுகிறது என அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தென் கொரியாவில் இருந்து நேற்று இலங்கை வந்த நபர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை துண்டுப் பிரசுரத்தில் தனிமைப்படுத்துவதற்காக 7 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த காரணத்தில் அது பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த துண்டு பிரசுரம் அரசாங்கம் வெளியிட்டது அல்ல என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருந்தார்.

தனிமைப்படுத்துவதற்காக ஒரு நபரிடம் 7 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்படும் என நேற்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததுடன் அரசுக்கு சொந்தமான சுயாதீன தொலைக்காட்சி நிறுவனமும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தது .