அங்கவீனமான இராணுவச் சிப்பாய்க்கு 45 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

Report Print Steephen Steephen in சமூகம்
420Shares

16 வயதுக்கும் குறைந்த சிறுமியை அடிக்கடி வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட ஆறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு வடமத்திய மாகாண சிவில் மேன்முறை முறையீட்டு மேல் நீதின்றம் மற்றும் அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இந்த சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

கல்னேவ, ரணவிரு கிராமத்தை சேர்ந்த மாமா என்ற மாகல ஹெட்டியராச்சிகே சுமணசிறி என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கே இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.