மட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில்

Report Print Steephen Steephen in சமூகம்
458Shares

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுக்கொண்டிருந்த இத்தாலி வந்த பெண், சிறார்கள் மற்றும் ஆண்கள் உட்பட 10 பேர் திடீரென நோய் வாய்ப்பட்ட நிலையில், நேற்று தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்று அவர்களை மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் முதலில் இவர்கள் கண்டி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்பதால், மீண்டும் தம்புள்ளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.