குறைந்த செலவில் தீயணைப்பு வாகனத்தை உருவாக்கிய பிரதேச சபை

Report Print Theesan in சமூகம்
119Shares

சாதாரண தண்ணீர் தாங்கி வாகனம் ஒன்றில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி தீயணைப்பு வாகனமாக உருமாற்றம் செய்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் பரீட்சித்து பார்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்,

எமது பிரதேச சபைக்கு தீயணைப்பு வாகனம் ஒன்றின் அவசியத்தை கருத்தில் கொண்டு உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அவர்களது 5 இலட்சம் ரூபாய் நிதி உதவியுடன் பிரதேச சபையினரின் தொழில்நுட்ப அறிவினையும் பயன்படுத்தி குறித்த தீயணைப்பு வாகனம் உருவாக்கபட்டுள்ளது.

வடமாகாணத்திலே குறைந்தளவு நிதியினை செலவளித்து இவ்வியந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இதனை இன்று பரீட்சித்து பார்த்துள்ளோம். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தீ விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த வாகனம் தீயணைப்பு வாகனத்தை ஒத்தவகையில் அதிதிறன் வாய்ந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளதுடன், பகல் வேளைகளில் 024-2225737என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் இரவு வேளைகளில் 0773634511 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.