கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டியான இலங்கையர் எந்த நாட்டினருடன் இறுதியாக பயணித்தார் என்பதை கண்டறியுமாறு சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
குறித்த நபர் கொழும்பின் புறநகரை சேர்ந்தவரெனவும், கடந்த மார்ச் 3ம் திகதிக்கும் 8ம் திகதிக்கும் இடையில் இவர் கண்டி மற்றும் தம்புள்ளைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த ஹோட்டல்களை தொடர்பு கொண்டால் இவர் இறுதியாக எந்த நாட்டினருடன் இருந்தார் என்பது தெரியவரும் என்று சுற்றுலா சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவர் இறுதியாக பயணித்ததாக நம்பப்படும் இத்தாலியர்கள் நாடு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.