நுவரெலியா மாவட்டத்தில் கடும் வறட்சியால் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பு!

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வறட்சியான காலநிலையால் சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியாவில் சுற்றுலாத்துறையை மையமாகக்கொண்டு செயற்படும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாறு காணாத வகையிலான கடும் வறட்சியால் நுவரெலியா மற்றும் அதனை அண்டியப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக டெவோன், சென்கிளயார், லக்ஸபான, ரம்பொடை, எபடீன் உட்பட மேலும் சில நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் சடுதியாக குறைவடைந்துள்ளதால் அப்பகுதிகளுக்கும் சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மதிய வேளைகளில் கடும் வெப்பம் நிலவுவதால் நுவரெலியாவிலுள்ள அழகிய காட்சிகளை தம்மால் மகிழ்ச்சியாக பார்க்க முடியாமல் இருப்பதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இலங்கையில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரும்பாலானவர்கள், பெரும்பாலான நேரத்தை ஹோட்டல் அறைகளிலேயே செலவிடுகின்றனர் என்றும், சில பயணிகள் இலங்கைக்கான சுற்றுலாவை பிற்போட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.