கொரோனா பரிசோதனைக்கு மத்தள விமான நிலையத்திற்கு அனுப்புங்கள்!

Report Print Navoj in சமூகம்

மத்தள விமான நிலையம் தற்போது பாழடைந்து போயுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு அங்கு கொண்டு செல்லலாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா பரிசோதனை தொடர்பில் அரசாங்கம் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும். இப்பரிசோதனைக்கு பெரியதொரு இடம் தேவை என்றால் மத்தள விமான நிலையம் தற்போது பாழடைந்து போயுள்ளது.

அதுமட்டுமல்லாது காட்டுப் பகுதிகளில் பல பெரிய இராணுவ முகாம்கள் இருக்கின்றன. அங்குள்ள இராணுவத்தினரை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டு அந்த முகாம்களிலேயே அவர்களைப் பராமரிக்கலாம்.

இவர்கள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் அதனை மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொண்டு வந்து எமது மக்கள் பாதிப்படையும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.