மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சை இயங்கி வருவதை கண்டித்து போராட்டம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சை இயங்கி வருவதை கண்டித்து ஜெயந்தியாய பிரதேசத்தில் கவனஈர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது எம்மை நோயாளி ஆக்காதே, கொரோனவை தூரப் போக்கு எம்மை நோயாளியாக்காதே, அரசே நாம் உம் பக்கம் நீ யார் பக்கம், எம்மை சாகடிக்காதே வாழ விடு, பரிசோதனை என்ற பேரில் எம்மை மடையனாக்காதே, எம்மை நிம்மதியாக வாழ விடு போன்ற பல வாசகங்கள் ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெயந்தியாய பிரதேசத்தில் அயல் பிரதேசத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சை இடம்பெறுவதால் இங்கு வாழும் எமது பிள்ளைகள் முதல் அனைவரும் பாரிய ஆபத்திற்கு ஆளாக நேரிடும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே உடனடியாக அகற்றுமாறு கோரி பொதுமக்கள் அழுந்தவாறு தங்களது கோசங்களை எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தினை கொரோனா சிகிச்சை மத்திய நிலையமாக மாற்றி அங்கு தங்க வைக்கப்பட்டு தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.