இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! விமான நிலையத்தில் உண்மை மறைக்கப்பட்டமையால் ஏற்பட்ட விபரீதம்

Report Print Vethu Vethu in சமூகம்

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்காத இரண்டு நபர்களுக்கு வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நபர்கள் இருவரின் சுயநலவாத செயற்பாடு தொடர்பில் நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இந்த நபர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து வரும் போதே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்ததாகவும் அவர்கள் இது தொடர்பில் உண்மையை மறைத்தமையினால் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நபர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்காத நிலையில் பெரசிடமோல் போன்ற மருந்துகளை அருந்தி நோயை மறைத்துள்ளனர்.

இதனால் அவர்களின் நோய்த்தன்மை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதனை அறிந்தும் விமான நிலையத்தில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்காமை மற்றும் ஏனைய நபர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடும் நபர்களை பிடியாணை இன்றி கைது செய்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


you may like this video