பூஜித்தின் பதவி காலம் நிறைவு! புதிய சட்டமா அதிபர் நியமனம்..?

Report Print Ajith Ajith in சமூகம்
155Shares

இலங்கையில் புதிய காவல்துறை மா அதிபர் நியமிக்கப்படவுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கவேண்டும் என்ற குற்றச்சாட்டின்பேரில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த பூஜித் ஜெயசுந்தரவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்தநிலையிலேயே புதிய காவல்துறை அதிபர் நியமிக்கப்படவுள்ளார்.

இதற்காக பதில் காவல்றை அதிபர் சிடி விக்கிரமரட்ன, உதவி காவல்துறை அதிபர் ஜே.அபேகுணவர்த்தன மற்றும் நந்த முனசிங்க ஆகியோரின் பெயர்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காவல்துறை மா அதிபர் நியமனத்துக்கான ஒருவரின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்வார்.

எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையால் ஜனாதிபதியின் பரிந்துரை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு பின்னரே மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட பூஜித் ஜெயசுந்தர, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் புலனாய்வு அறிக்கைகளை உரியமுறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டு பதவியில் இருந்து விலகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் கோரப்பட்டார்.

எனினும் 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அவரை ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யமுடியாது போனது.

இதேவேளை ஓய்வுபெறும் காவல்துறை மா அதிபர் ஓய்வூதியம் மற்றும் வரியற்ற வாகன சலுகை என்பவற்றுக்கு உரித்துடையராக இருப்பார்.