கொரோனா வைரஸ் - இலங்கையின் கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இலங்கையின் கடற்றொழிலாளர்கள் 15பேர் கைது செய்யப்படாமல் சில மணிநேரத்தில் கடல் பகுதியிலேயே வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில் குறித்த இலங்கையர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய கடற்படையினர் விரும்பவில்லை.

இதனையடுத்து சில மணித்தியாலங்களில் அவர்கள் இலங்கையின் கடற்படையினரிடம் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளும் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன.