உலக சந்தையில் தங்கத்தின் விலை வார இறுதியில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை வீழ்ச்சியடைந்ததால் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் தங்கம் 4.5 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த வாரத்தில் 1983 அமெரிக்கா டொலராக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கம், தற்போது 1548 டொலராக பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏனைய வர்த்தக இடங்களில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.