முரசுமோட்டை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - முரசு மோட்டை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி - முரசு மோட்டை , கோரக்கன் கட்டு குடியிருப்புப் பகுதியை சேர்ந்த முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்ற நபரே இவ்வாறு இன்று கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முரசு மோட்டை , கோரக்கன் கட்டு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு ஆபத்தான வெடி பொருளொன்று வெடித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முரசுமோட்டை இராணுவத்தினர் குறித்த வீட்டில் தேடுதல் நடத்திய பொழுது ஆபத்தான பல வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.