கொரோனா வைரஸ் சந்தேக நபர்களை மன்னாரிற்கு கொண்டு வர நடவடிக்கை! பீதியில் மக்கள்

Report Print Ashik in சமூகம்

நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையிலும் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்களை மன்னாரிற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிய வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இயங்காமல் இருக்கும் மன்னார்- தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை கட்டிட தொகுதியில் குறித்த நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மக்கள் மத்தியில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதனால் மன்னார் மக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். குறித்த ஆடைத்தொழிற்சாலையை அண்டிய பகுதியில் மக்கள் அதிகம் நெருக்கமாக வாழ்வதாகவும் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்த வேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என கருதி மன்னாரில் தனிமைப்படுத்துவதற்காக அழைத்து வரும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டிற்குள் வருபவர்களில் 'கொரோனா' வைரஸின் தாக்கம் இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்களை மன்னாரிற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

குறித்த நடவடிக்கை மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள 'காமன்ஸ்' கட்டிட தொகுதியில் இன்று (15) குறித்த நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மக்கள் வெளியாகி உள்ளது.

குறித்த பகுதியில் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என பலதரப்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கும் குறித்த வைரஸ் தொற்று ஏற்படலாம். எனவே வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மன்னாருக்குள் அழைத்து வந்து தனிமைப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.