அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மூடுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

Report Print Steephen Steephen in சமூகம்
3499Shares

அரச மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களையும் சில நாட்களுக்கு மூடுவது சம்பந்தமாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நாளைய தினம் அரச பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகரிக்கும் நிலைமையின் அடிப்படையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மூடுவது தெடர்பாக ஆராய்ப்பட்டு வருகிறது.

அடுத்த சில மணி நேரங்களில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கத்தின் உயர் மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.