யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் திட்டத்துக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் அதிக நிதி செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2018ஆம் ஆண்டு 2 பில்லியன் ரூபா இந்த திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பிரதமர் அலுவலகமும் நீர்ப்பாசனத்துறை அமைச்சும் இதற்கான திட்டத்தை முன்மொழிந்திருந்தன. இதன்கான அடிக்கல்லும் கடந்த ஆகஸ்டில் நாட்டப்பட்டது.
எனினும் நீர்ப்பாசனத்திணைக்களம் தற்போது புதிய ஒதுக்கீட்டு திட்டத்தை தற்போது திணைக்களம் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னைய நிதியைக்காட்டிலும் 580 வீதம் அதிகமான 13.8 பில்லியன் ரூபாவை திணைக்களம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்சவின் தலைமையில் கூடிய கூட்டம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டபோதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இந்த திட்டத்தின்கீழ் 1500 ஏக்கர் காணியில் 25அடி உயரமான நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 650, 000 பேருக்கு நாளாந்தம் 50ஆயிரம் கியூபிக் நீர் விநியோகப்படுவதான ஏற்பாடே மேற்கொள்ளப்படுகிறது என்பதை பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சரே பல்கலைக்கழகத்தின் கலாநிதி ஆர்கே குகனேசராஜா இந்த திட்டத்தை முன்மொழிந்திருந்தார்.