உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். சர்வதேச விமான நிலையம் இரு வாரங்களுக்கு மூடப்படும்

Report Print Steephen Steephen in சமூகம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இரண்டு வாரங்களுக்கு மூட உள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை கூறியுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு விமான சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.