கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க வேண்டி யாக பூஜை

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் கொரோனா வைரஸில் இருந்து உலக மக்களை காக்க வேண்டி யாக பூஜை இடம்பெற்றது.

வவுனியா, தோணிக்கல் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதர் திருக்கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் வழிபாட்டினை பிரபாகரக் குருக்கள் தலைமையேற்று நடத்தியிருந்தார்.

இதன்போது கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ள மக்களின் நல்வாழ்வுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் விசேட யாக பூஜையும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை ஆலயத்திற்கு வருகை தந்த அனைத்து அடியார்களும் உலக மக்களுக்காக நெய் விளக்கேற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டதுடன் தமிழருவி சிவகுமாரனின் சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது.