முஸ்லிம் சமூகத்திடம் ஜம்மியத்துல் உலமா விடுத்துள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்
186Shares

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மா தொழுகைககளையும் ஐவேளை தொழுகைகளையும் தவிர்க்குமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் மறு அறிவித்தல் வரை பொதுவான இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும் ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே இந்து கலாசார திணைக்களம் கோயில் வழிபாடுகளை தவிர்க்குமாறு இந்து சமூகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு பின்னர் இரண்டு வாரங்களுக்கு கத்தோலிக்க தேவாலயங்களில் பிரார்த்தனைகளை இடைநிறுத்துவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.