கொரோனா வைரஸ் தொற்று! திருகோணமலையில் இருந்து மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட்ட நபர்

Report Print Kumar in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திருகோணமலையில் இருந்து ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை ஆண்டான்குளத்தினை சேர்ந்த ஒருவரே திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து மட்டக்களப்பில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் திருகோணமலையில் உள்ள வெளிநாட்டினர் வந்துசெல்லும் விடுதியில் கடமையாற்றிவந்த நிலையில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சோதனை முடிவுகளின் பின்னரே குறித்த நபர் தொடர்பில் அறிவிக்க முடியும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் நேற்று சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.