இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்
1813Shares

பிந்திய செய்தி

இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து வருகை தந்த நிலையில் கந்தகாடு தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களே வைரஸ் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், குறித்த நபர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவருடன் சேர்த்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.