தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கவர்ந்த திருகோணமலை கன்னியாவில் உள்ள வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்து்ளள பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதி இன்று மூடப்படும் என திருகோணமலை மாவட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரி மொஹான் ஆரியதிலக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை நிலாவெளியில் அமைந்துள்ள பறவி தீவும் இன்று முதல் 14 நாட்களுக்கு மூடப்படும் என திருகோணமலை வனஜீவராசிகள் திணைக்கள பதில் உதவிப் பணிப்பாளர் கீர்த்தி சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.