யாழில் பட்டப்பகலில் வீடுகளில் கொள்ளையடித்த நபர் கைது

Report Print Sumi in சமூகம்

பட்டப்பகலில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த திருடனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொடிகாமம் வரணிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவில் வைத்து இன்று பொலிஸ்நிலைய சிறு குற்றப்பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இவரிடம் இருந்து, இவர் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் உட்பட திருடப்பட்ட சங்கிலி மற்றும், பென்டென், மோதிரம் உள்ளிட்ட மடிக்கணணிகள், கையடக்கத் தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இவரை நாளை (16) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.