கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சார்க் நாடுகளுக்கு மத்தியில் அவசர நிலையம்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சார்க் நாடுகளுக்கு மத்தியில் அவசர நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

சார்க் நாடுகளின் தலைவர்கள் மத்தியில் இன்று செய்மதி காணொளி மாநாடு இன்று நடத்தப்பட்டிருந்தது.

இதன்போது நரேந்திர மோடி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த நிதியம் சுயாதீனமாக வழங்கப்பட வேண்டும் என்றும் நரேந்திர மோடி கேட்டுள்ளார்.

இந்தியா இந்த நிதியத்துக்காக 10 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த காணொளி மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய கூறியுள்ளார்.