வவுனியா வர்த்தகர்களுக்கு வர்த்தக சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Report Print Thileepan Thileepan in சமூகம்
360Shares

வவுனியா மாவட்டத்திலிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் நாளைய தினம் வழமை போன்று திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு வவுனியா வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய நாளையதினம் (16 ஆம் திகதி) பொது அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் வங்கிகள் , தனியார் நிறுவனங்கள் , அரச நிறுவனங்களுக்கு மாத்திரமே இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு இலங்கை அரச தகவல் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய வவுனியா மாவட்ட வர்த்தகர்களை நாளையதினம் வழமை போன்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.