கொரோனா வைரஸ் தொற்று! கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் தினத்தினை எதிர்வரும் இரண்டு வார காலங்களுக்கு இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் 18 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நாட்டில் பல்வேறு தீர்மானங்கள் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.