பருத்தித்துறையில் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் - பொலிஸாரால் வீடு முற்றுகை

Report Print Tamilini in சமூகம்
3464Shares

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுதல் அவசியம் என இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் பரிசோதனைக்கு உட்படாமல் இத்தாலியிலிருந்து வந்து பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் தங்கியிருந்தவா்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபா்கள் தங்கியிருந்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனா்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இத்தாலியிலிருந்து வந்த சிலர் குறித்த வீட்டில் தங்கியிருப்பது தொடா்பாக கிடைத்த இரகசிய தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட நிலையில் இன்று மாலை குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாா் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.

எனினும் குறித்த நபா்கள் தொடா்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக தகவல் வழங்க பொலிஸாா் மறுத்துள்ளனர்.

குறித்த வீட்டில் வேறு சில நாடுகளில் இருந்து வந்தவா்களும் தங்கியிருந்தபோதும் அவர்கள் முற்றுகையிடப்பட்டபோது வெளியில் சென்றுள்ளனர்.

இருப்பினும் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் ஒரு மாத காலத்திற்கு முன்னர் வந்துள்ளதாக தெரிவித்த போதிலும் அவர்களை அம்பியூலன்ஸ் வண்டியில் சோதனைக்கான ஏற்றப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.


you may like this video