காரைதீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காரைதீவில் இடம்பெற்ற விபத்தில் காரைதீவு பிரதேசசபை ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று கல்முனை, அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனைநோக்கி வந்த இ.போ.ச. பேருந்தொன்று பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த வேளை பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காரைதீவு பிரதேசசபையின் ஊழியரான 55 வயதுடைய சீனித்தம்பி கந்தசாமி எனும் 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.