யுத்தத்தில் கால்களை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல் குடும்பத்தினருக்காய் வாழும் ஆண்

Report Print Banu in சமூகம்

உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது.

இதற்கு சாட்சியாய் இன்றும் அந்த கொடிய போரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்த பலர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இறுதி யுத்தத்தின்போது பல கொடூரங்களையும், துயரங்களையும் தாங்கி நின்ற இடமே புதுக்குடியிருப்பு பகுதி.

இங்கு வாழும் மக்கள் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகளற்ற நிலையில் இருப்பதுடன், தம் வாழ்நாளை பல துயரங்களுடன் கழித்து வருகின்றனர்.

அவர்கள் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் துயரங்களை எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி வெளிக் கொணர்ந்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியைச் சேர்ந்த முத்தையா ராஜேந்திரன், இறுதி யுத்தத்தில் தமது கால்களை இழந்த நிலையிலும் செயற்கை கால் பொருத்தி கூலி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

இவர் தமது இன்னல்களை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600.