குப்பை மலையில் ஏற்பட்டுள்ள பாரிய தீப்பரவல்! தொடர்ந்து போராடும் பொலிஸார், தீயணைப்பு படையினர்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பண்டாரவளை, எல்ல பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குப்பை மலையில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள, குறித்த குப்பை மேட்டில் நேற்றிரவு 11.30 மணியளவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் எல்ல பிரதேசசபை தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

சுமார் மூன்று மணிநேரம் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீ 90 வீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், சற்று நேரத்தின் பின்னர் மீண்டும் தீ வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

இதனால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எல்ல பிரதேசசபையில் தீயணைப்பு வாகனம் இன்மையால், இன்று பண்டாரவளை மற்றும் பதுளையில் இருந்து வாகனம் வரவழைக்கப்பட்டதாக தெரியவருகிறது.

பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பற்ற நிலையிலேயே இக்குப்பை மேடு காணப்பட்டுள்ளதுடன், உக்காத பொருட்களும் அதிகளவு இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers

loading...