மூன்றாவது நாளாகவும் வவுனியாவில் ஊரடங்கு தொடர்கிறது!

Report Print Thileepan Thileepan in சமூகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றையடுத்து மூன்றாவது நாளாகவும் வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நாடு பூராகவும் ஊடரங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வந்தது.

எனினும், வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து வவுனியாவில் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் இருந்து பிற மாவட்டங்களுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

வவுனியாவின் வீதிகள் அனைத்தும் சன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் உள்ளனர்.

Latest Offers

loading...