பிரித்தானியா முடக்குவதாயின் அனைத்தையும் முடக்கி கொரோனாவை சிறிதளவேனும் அடக்குங்கள்

Report Print Tamilini in சமூகம்

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயினால் தினம் தினம் உயிழப்புக்கள் கூடிக்கொண்டுவரும் நிலையிலும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் நிலையில் நேற்றிரவு பிரித்தானிய பிரதமர் பிரித்தானியாவை முடக்குவதாக அறிவித்திருந்தார்.

பிரித்தானியாவை கொரொனாவில் இருந்து எதிர்ப்பதற்காக அனைத்து மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவித்து பிரித்தானியாவை 3 வாரங்களுக்கு முடக்கி விட்டதாக தெரிவித்திருந்தார்.

ஆனாலும் பிரதமர் முற்றாக முடக்கவிலை அவர்குறிப்பிட்டதில்,

மேற்குறிப்பிட்டவைகள்தான் அடங்கும்.

மருந்தகம் ,உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும். தேவையேற்படுவோர் ஒருவராக சென்று வாங்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இச் சூழ்நிலையில்அனைவருக்கும் உணவுப் பொருட்கள், மருந்துகள் தினமும் வாங்க வேண்டிய அத்தியாவசியம் இருப்பதனால் அனைவரும் தான் வெளியில் செல்ல முற்படுவார்கள்.

பொலிசார் இதனைக் கட்டுப்படுத்துவர் என தெரிவித்தாலும் பொலிசாரையும் மீறி மக்கள் வெளியில் செல்லத்தான் நினைப்பார்கள். நினைப்பது என்ன பிரித்தானியா முடக்கப்பட்டதா இல்லையா என்ற குழப்பத்தோடு மக்கள் வழமைபோன்று நடமாடுகின்றனர்.

எனவே பிரதமர் முடக்குவதாயின் அனைத்தையும் ஒரு கிழமைக்கேனும் முடக்கிவிட்டு தொற்றுப் பரவிலினால்அடையாள்ம் காணப்படுவோர் வீதம் குறைகின்றதா என பாருங்கள்.

ஏனெனில் உங்களின் வியத்தகு கட்டளைக்கேற்ப அத்தியாவசிய தேவை நிமிர்த்தம் வெளியில் சென்று வரும் அந்த ஓரிருவரினால் தொற்று காவப்பட்டு சமூகத்தில் பரவாது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் வந்திருக்கலாம்.

எனவே தயவுசெய்து மக்களே இதுவரைக்கும் வாங்கிய பொருட்கள் அனைத்தும் போதும். ஒரு குறுகிய நாட்களுக்கேனும் பிரதமர் சொன்னாரோ இல்லையோ நம் மனதுக்கு இதுவே சரியென நினைத்து வீட்டுக்குள் இருப்போமே தொற்றிலிருந்து நம்மை நாமே காப்போமே....!

Latest Offers

loading...