யாழில் கொரோனாவைவிட உக்கிரம் அடையும் பட்டினி!! அதிகாரிகள் மீது ஆதங்கப்படும் பெண்

Report Print Jeslin Jeslin in சமூகம்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த வேளையில், சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சில மாவட்டங்களில் காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரைக்கும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொது மக்கள் தங்களது பணத்தினை எடுப்பதற்கும், நகைகளை அடகு வைப்பதற்கும் வங்கிகளுக்குச் சென்ற போதும் பொது மக்களை அவர்கள் திருப்பியனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.

எவ்வாறாயினும் இன்றைய தினம் காலை 8 மணியிலிருந்து 12 மணிவரைக்குமான சேவையாக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், இது தொடர்பில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இன்மையே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் சில அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான காணொளி இதோ,

Latest Offers

loading...