கிளிநொச்சி பகுதியில் மனிதாபிமான உதவியாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

Report Print Murali Murali in சமூகம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் தினமும் நாள் கூலிக்கு வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு - கிழக்கில் இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், கிளிநொச்சி பகுதியில் மனிதாபிமான உதவி பணியாக பிறேம் என்பவரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.