மட்டக்களப்பில் சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மக்களுக்கு முக கவசங்கள், கையுறைகள் வழங்கி வைப்பு

Report Print Kumar in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அரசாங்கம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு பலம் சேர்க்கும் வகையில் பல பொது அமைப்புகளும் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

அந்த வகையில் பொது மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் கையுறைகள், முக கவசங்கள் என்பன மட்டக்களப்பு மாவட்டத்தின் ஜி.கே.அறக்கட்டளை நிதியத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர், களுவாஞ்சிகுடி, செங்கலடி, வாழைச்சேனை ஆகிய சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கே இவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தலைமையில் இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.