மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு நடமாடும் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியானது நேற்றைய தினம் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூதினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்வு எந்தவகையிலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய நடமாடும் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அறுபது பேருக்கு நேற்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.