தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

Report Print Kumar in சமூகம்
256Shares

தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த மேலும் 208 பேர் வீடு திரும்பினார்கள்!

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி பொலனறுவை - கந்தகாடு மற்றும் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்தியஸ்தானங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 208 பேர் இன்று காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஏற்கனவே நேற்று செவ்வாய்க்கிழமை பொலனறுவை - கந்தகாடு மற்றும் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 311 பேர் தங்களது வீடுகளுக்குச் சென்றனர்.

குறித்த அனைவரும் இராணுவ பஸ்களில் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இரண்டு வார தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக முடித்ததற்கு சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்பட்டது என இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கொரோனா தடுப்பு முகாம்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் அவர்களின் குடும்பங்களுடன் அவர்களை இனைக்கும் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இரானுவத்தினரின் இரண்டு பஸ்கள் மூலமாக புனானை முகாமில் இருந்து மாத்தறை பகுதிக்கு 80 பேரும் கொழும்புக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 125 பேரும் கண்டிக்கு ஒரு பஸ் மூலமாக 33 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இரானுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேர்கள் இரானுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.