சிகரட் மற்றும் மதுபான வகைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக இவ்வாறு மதுபான வகைகள் மற்றும் சிகரட் வகைகள் கறுப்புச் சந்தை விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
சில இடங்களில் ஒரு சிகரட் 100 ரூபாவிற்கும் அதி விசேடம் அல்லது கல் சாராயம் என்றழைக்கப்படும் மதுபான போத்தல் ஒன்றின் விலை 2500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்வாறு கூடுதல் விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் மற்றும் சிகரட் விற்பனை செய்யும் இடங்களை சுற்றி வளைப்பதற்கு காவல்துறையினரும், கலால் திணைக்கள அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.