கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்!

Report Print Steephen Steephen in சமூகம்
200Shares

கொரோனா வைரஸ் தொற்றியதாக உறுதிப்படுத்தப்படாத நோயாளிகள் சுமார் 552 பேர் நாட்டில் இருப்பார்கள் என அறிவியல் ரீதியாக யூகிக்க முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலததில் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவியுள்ளது. இதனை தொடர்ந்தும் நாட்டுக்கு பரவாமல் கட்டுப்படுத்த மட்டுமே நம்மால் முடியும். 99 நோயாளிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். இரண்டு நோயாளர்கள் முற்றாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட 19 ஆயிரம் பேர் நாடு முழுவதும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாகத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் வழியாக நோயாளர்கள் வருவதை ஜனாதிபதி முற்றாக நிறுத்தியுள்ளார்.

நோய் தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் நோய் பரவாமல் தடுக்கவுமே தம்மால் முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.